Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

 

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!எல்லாம் இழந்துஏதிலி ஆனது - என்தமிழ்சாதி !!நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்அகதியாக்கிய உலகே - இன்றுஅகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உண்மையான தலைவன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

true-leader1அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.

அப்படி ஒருமுறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசியபோது சிப்பாய் ஒருவர் மரணத் தறுவாயில் இருப்பதாக மருத்துவர் ஒருவர் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்தச் சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

அந்தச் சிப்பாய்க்கு ஜனாதிபதியை அடையாளம் தெரியவில்லை.  ”என் தாய்க்கு ஒரு கடிதம் எழுத முடியுமா?” என்று கேட்டான்.

சம்மதித்த ஆப்ரகாம் அவன் சொல்லச் சொல்லக் கடிதம் எழுதினார். எழுதி முடித்த பின்னர் “தங்கள் மகனுக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன்” என்று கடைசியில் எழுதியதைப் பார்த்த பிறகு தான் அந்த சிப்பாயிற்குத் தனக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன் என்பது தெரிந்தது.

வியப்புடன் அந்தச் சிப்பாய் கேட்டான். “நீங்கள் ஜனாதிபதி தானே?”

“ஆம்” என்று அன்புடன் சொன்ன ஆப்ரகாம் லிங்கன் “தங்களுக்கு வேறெதாவது நான் செய்யக்கூடியது இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

அந்தச் சிப்பாயின் மனநிலையைச் சொல்ல வேண்டியதேயில்லை. உற்றார் உறவினர் என்று யாரும் அருகில் இல்லாத போது அன்பைக் காட்டி அருகில் அமர்ந்திருப்பது ஜனாதிபதி என்கிற போது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

கடைசி மூச்சின் நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட அந்தச் சிப்பாய் அவரிடம் வேண்டிக் கொண்டான். “தாங்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டால் அது என் வாழ்வின் முடிவைப் பெருமையுடன் சந்திக்க உதவியாக இருக்கும்”

ஆப்ரகாம் லிங்கன்  அவன் கையைப் பிடித்துக் கொண்டதும் அல்லாமல் அவனிடம் அன்பான இதமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்க அந்த சிப்பாயின் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்த ஒரு போர் வீரனுக்கு அந்தத் தலைவர் காட்டிய அன்பையும் மரியாதையையும் பாருங்கள்.

உயர் பதவி கிடைத்து விட்டால் தங்களை ஏதோ தனிப் பெருமை வாய்ந்தவர்களாக நினைத்துக் கொள்ளும் தலைவர்கள் இருக்கும் காலக்கட்டத்தில் இது போன்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா?

அரசியலிற்கப்பாற்பட்ட இன்னொரு தலைவரைப் பார்ப்போம். இந்தியாவின் Atomic Energy and Space Commission  தலைவராக இருந்த பேராசிரியர் சதீஷ் தவான் 1973ல் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு முதல் விண்கலம் அமைக்கும் பணியைத் தந்தார். அப்துல் கலாம் தலைமையில் ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுனர்கள், சுமார் பத்தாயிரம் ஊழியர்கள், வேலையாட்கள் அந்த விண்கலத்திற்காகக் கடுமையாக உழைத்தனர்.  ஆகஸ்ட் 17, 1979 அன்று விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. ஆயிரக்கணக்கான பாகங்கள், கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் கொண்ட அந்த விண்கலம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் பழுதடைந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது.

அன்று சதீஷ் தவான் அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அந்தத் தோல்விக்கு Atomic Energy and Space Commission தலைவர் என்ற நிலையில் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.  மிக அருமையான திட்டம் அது என்றும் சில எதிர்பாராத சிறு குறைபாடுகளால் தோல்வியடைந்தது என்றும் அவை சரி செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் மீண்டும் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அப்துல் கலாம் அவர்கள் தான் அந்த விண்கலப்பணிக்கு இயக்குனர், எல்லா வேலைகளும் அவர் மேற்பார்வையில் தான் நடந்தது என்ற போதிலும் சதீஷ் தவான் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

மறுபடியும் விண்கலம் பழுதுகள் நீக்கப்பட்டு வெற்றிகரமாக ஜுலை 18, 1980ல் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றியை அறிவிக்க பேராசிரியர் சதீஷ் தவான் டாக்டர் அப்துல் கலாமையே சென்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் சொன்னார். தோல்விக்குத் தான் பொறுப்பேற்று வெற்றிக்கான பேரையும் புகழையும் அதற்கென உழைத்தவருக்கே விட்டுக் கொடுத்த பெருந்தன்மையைப் பாருங்கள். இவரல்லவோ உண்மையான தலைவர். இந்தச் செய்தியை அப்துல் கலாம் அவர்களே பல மேடைகளில் சொல்லித் தன் தலைவருக்கு உரிய புகழைச் சேர்த்திருக்கிறார்.

உண்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருப்பார் என்ற அடையாளமே மறந்து போய் விட்ட காலக்கட்டத்தில் இருக்கிறோம் நாம். காமிராக்களுக்கு முன் மட்டுமே காட்டும் மனித நேயம், மேடைகளில் மட்டுமே காட்டும் வீரம், தன் புகழையும், சொத்தையும் வளர்க்க எதையும் யாரையும் செய்யும் தியாகம் என்ற பண்புகளுடன் இன்று புற்றீசலாகப் பெருகி வரும் தலைவர்கள் எல்லாம் உண்மையான தலைவர்கள் அல்லர். உண்மையான தலைவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு ஆப்ரகாம் லிங்கனும், சதீஷ் தவானும் மனதைத் தொடும் சிறந்த உதாரணங்கள்.

 

-என்.கணேசன்

 

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
நல்ல கட்டுரை
1 செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010 01:46
வி.நாராயணன்
இப்போதுள்ளவர்கள் கொள்ளைக்காரர்கள். அவர்களை தலைவர்கள் என்று அழைப்பது முட்டாள்தனம். லிங்கன், தவான் சான்றுகள் நெஞ்சத் தொடுகின்றன. நன்றி

வாசகர் கருத்துக்கள், category: "பொதுக்கல்வி"

டேனியல்லா சாதனைப்பெண் டேனியலா கார்சியா
ஜோஹாரி சாளரம் ஜோஹாரி சாளரம்
நல்ல கட்டுரை உண்மையான தலைவன்
வாழ்க்கைப் பாடம் வாழ்க்கைப் பாடம்
உண்மை சில நேரங்களில் சில மனிதர்கள்
மாறுங்கள், மாற்றுங்கள் மாறுங்கள், மாற்றுங்கள்
பலனுள்ள தகவல் அது, நன்றி! சில நேரங்களில் சில மனிதர்கள்
மிக அருமை கலைந்த கனவும் கலையாத மனமும்

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்