குறைசொல்லி மனசுகள்
பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக
நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து
வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும்
மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம்
இப்போதும் இருக்கிறது.
அதே தளராத உறுதி.
அதே உழைப்புக்கான ஊக்கம்.
அதே தன்னலமற்ற தியாகம்.
மிக நன்று. தெளிந்த ஒலிப்பதிவு. நல்ல குரல்வளம். கவிதை பற்றி விமர்சிக்க தகுதியில்லை.
ஆனால் ஓர் ஆலோசனை.
நல்லதொரு பின்னணி இசையோடு இதை ஒலிப்பதிவு செய்து விட்டால் இன்னும் நல்ல உணர்வாக இருக்கும்.
மாவீரர் தின நிகழ்வுகளில் இதை ஒலிக்கவிடலாம். ஏதாவது வானொலிக் கலையகத்தாரோடு அணுகினால் அவர்களைக் கொண்ட நல்ல பின்னணி இசை சேர்க்கலாம். அவர்களும் தமது வானொலியின் இந்த ஒலிவடிவை ஒலிபரப்பலாம்.
வெறும் காட்டில் எறிக்கும் நிலவா? அல்லது உங்கள் நெஞ்சைத் தொடுகின்றேனா?
கருத்துக்களை காணும் தோறும் எழுதுங்கள். என் உணர்வுக்கு நீங்கள் வழங்கும் பொக்கிசம் அதுதான். நன்றியுடன்-புதியபாரதி