Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..

மின்னஞ்சல் அச்சிடுக PDF

vimaldaughter

 

என் அப்பாவை ஒளி(ழி)த்த குற்றத்துக்காக

அவர்களை நோக்கி வருகிற

தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்

நாக்குத் தொங்கச் சாகப்போகிற

தீர்ப்புக்களிடமிருந்து

தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக

தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு

உன் அப்பா

நேற்று உண்ணாவிரதமிருந்தார்.


கூடவே...

நீயுமுன் அப்பாவுக்காக சாப்பிடாமல்

அடம்பிடித்துக் கிடந்தாயாம்.

 

தோழியே!

மனதை தேற்றிக்கொள்.

ஒன்றிரென்டு நாள் பட்டினி கிடந்தாவது

உயிரோடிருக்கிற உன் அப்பாவை

வீடு கொண்டுவந்து சேர்க்க

உன்னால் முடிந்திருக்கிறது.


இங்கே...

காணாமல் போகடிக்கப்பட்ட என் அப்பாவை

தேடிக்கொண்டேயல்லவா

நான் தினமும் உணவுக்கு வழியற்று

பட்டினியிருக்கிறேன்.

 

நேற்று

நானும்..தம்பியுமாய் சேர்ந்து

கருகிக்கிடக்கும் எம் வீட்டின் சாம்பலுக்குள்

கடைசிவரை தேடியும் கிடைக்கவேயில்லை.

உன்வயதே இருக்கும் எங்கள் அப்பாவின்

ஒரேயொரு புகைப்படமாவது.


அம்மாவின் பொட்டில்லாத நெற்றியையும்

சிரிப்பில்லாத உதட்டையும்

பார்க்க பார்க்க அழுகை வருகிறது.

 

உன் அப்பாவுக்கு

தவழ்ந்துவந்து யூஸ் கொடுக்கிற

உனது ஜனாதிபதி

எங்களுக்கு குளிப்பதற்கே நீரளந்து தருகிற

ஒரே நாட்டுக்குள் தான்

நானும் நீயும் இருக்கிறோம் தோழி.

 

சித்தார்த்தனின் மாளிகைக்குள்ளிருந்து

உனது கண்களால்

நான் திருவோடு ஏந்துகிற காட்சியை

நீ கண்டுகொள்ள முடியாது தான்.


எனினும்

அப்பா இல்லாத வீட்டின்

வலிகளிலொரு துளியையேனும்

நீ அனுபவித்திருப்பதால் கேட்கிறேன்.

 

எனது ஏக்கம் உனக்கு புரிகிறதா?

சாரத்தை ஊஞ்சலாக்கிக் கொண்டு

நான் ஒளித்திருக்கிற என் அப்பாவின் மடியும்..

 

குலுங்கிக் குலுங்கி சிரிக்க

வானம் தூக்கியெறிந்து பிடிக்கும்

அப்பாவின் கரங்களும்..

உனக்கு கிடைத்தது போல

எனக்கும்

ஒருநாள் திரும்பக் கிடைத்துவிடாதா?

 

eelamson

பாடசாலைகளுக்கு

சிறுவர்களை கைப்பிடித்து வரும்

உரோமமுள்ள கரங்களில்... ...

திருவிழாக்களில்

குழந்தைகளை தூக்கிவைத்திருக்கும்

புடைத்த தோள்மூட்டுக்களில்... ...

முன்னால் சிறு மொட்டை விழுந்திருக்கும்

தகப்பன்மாரின் தலைகளில்... ....

என் அப்பா வைத்திருந்த

அதே கறுப்புநிற மோட்டார்சைக்கிளில்

வீதியில் போய்வருவோர் முகங்களில்... ...

கிடைத்துவிடுமென்ற எதிர்பார்ப்புடன்

கண்கள் களைத்துப் போகும்வரை

நானின்னும் தேடிக்கொண்டே தானிருக்கிறேன்.


இப்போ

என் முதலெழுத்தோடு மட்டுமே மிஞ்சியிருக்கிற

என் அப்பாவை.

 

*** முற்றும் ***

 

 

தீபிகா

18.07.2010

09.27 pm

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
இதயம் கணக்கிறது
2 சனிக்கிழமை, 31 ஜூலை 2010 19:21
பாலா
வார்த்தைகள் என்னை கொல்கிறது. என் சகோதரனின் மகளே.. தமிழகத்தில் இருந்து உனக்கு எதுவும் செய்ய இயலாமையில்..
வஞ்சனை
1 புதன்கிழமை, 28 ஜூலை 2010 17:44
மது
பதுங்கு குழிகளில் பதுங்கினோம்!
தடுப்பு முகமில் அடைக்கப்பட்டோம்.
வழ்கையை இளமையிலேயே தொலைத்து விட்டு
வாழ மனமின்றி வாழ்கிறோம்.

எம் தலைவன் மறைந்த பின்பு
எல்லோரும் ஓர் மக்கள் என்றான்
இன்னாட்டு அரசன்
நம்பித்தான் வட்டுவாகல் தாண்டிணோம்.

வஞ்சம் கொண்ட நாட்டு மன்னன்
வாழ்வாதார பிரச்சணைகளுடன்
வாழும் எம் மக்களின்
சொத்துக்களைப் பறித்தான்
பு+ர்வீக மண்ணை அபகரிக்கிறான்
மொத்தத்தில் சிங்கள பேரினவாதம்
எம் மக்களுக்கு செய்வது என்று
நய வஞ்சணை!

வாசகர் கருத்துக்கள், category: "கவிதை"

nilaave கறுப்பு நிலாக்கள்
மறுவாழ்வு மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...
tamilanuku alivillai கறுப்பு நிலாக்கள்
Mari irukira oorum meethi irukum uravum... மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...
Karuppu Nila கறுப்பு நிலாக்கள்
karuppu nilakkal கறுப்பு நிலாக்கள்
vethanai கறுப்பு நிலாக்கள்
இதயம் கணக்கிறது விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..
Poor kutta Arasankam. போர்க்குற்ற அரசாங்கம்
செம்மொழியான தமிழ்மொழியாம் செம்மொழியான தமிழ்மொழியாம்!!

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி