Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

 

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!எல்லாம் இழந்துஏதிலி ஆனது - என்தமிழ்சாதி !!நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்அகதியாக்கிய உலகே - இன்றுஅகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Pirabakaran-Anthathy02

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?

போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*

மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க

உன்போலும் ஆமோ உரை! (11)

 

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்

கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;

தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ

உனைநிகர்த் தோனை உலகு! (12)

 

உலகம் வியக்கும் உயர்தனிக் கோனே!

இலங்கைத் தமிழர்க்(கு) இறைவா! -உலங்குவா(ன்)

ஊர்திப் படைகண்ட ஒண்டமிழா! சிங்களரின்

மார்பிளந்த நீயன்றோ மன்! (13)

 

மன்னு புகழ்மறவா! மானத் தமிழா!நாம்

உன்ன உளத்துள் உறைபவனே! –பொன்னனைய

துய்ய மனத்தால் துயரம் களைந்தகதிர்க்

கைய! எமக்குநீ காப்பு! (14)

 

காப்பான எங்கள் கரிகாலா! செந்தமிழர்

கூப்பிக்கை கும்பிடும் கோமகனே! –மூப்பில்கை

பற்ற உதவும் பசுந்தடி போலெமக்(கு)

உற்றதுணை ஆனாய் உவந்து! (15)

 

உவமையொன்(று) இல்லா உயர்கோனே! நீயே

உவமையுனக்(கு) என்றே உணர்ந்தோம் –உவட்டா*

இனிப்பதுவே! பாயும் இளம்புலியே! ஈழம்

இனிப்பொதுவே ஆகும்நாள் என்று? (16)

 

என்று பிறந்தகுடி என்ப(து) அறியாமல்

இன்றும் உலகம் எதிர்நோக்கும் –பொன்றா*த்

தமிழ்க்குடியைக் காத்த தலைவா! நீயே

அமிழ்தினும் மிக்க அரிது! (17)

 

அரிதரி(து) உன்போல் அடலேறைக்* காணல்;

அரிதரி(து) உன்னை அடக்கல் –அரிதரிது

கொள்கைக்(கு) உயிர்கொடுக்கும் கோவுன்போல் காண்பரி(து);

உள்வைத்தோம் உன்னை உவந்து! (18)

 

உவரி* நடுவே உதித்த தமிழர்

உவலை*க் கடலில் உழலும் –அவலம்

களையப் பிறந்த கரிகாலா! உன்னை

அளைய*ப் புகுமெம் அகம்! (19)

 

 

அகமென்ற ஒன்றை அடியோ(டு) அகற்றிப்

பகைகொண்ட மாணார்*ப் பரிசை -அகம்கொண்ட

மாந்தர் அறிய, மறவா! அமைதிவழி

ஏந்திப் பிடித்தாய் இயன்று! (20)

 

குறிப்பு:

கார் -மழைமுகில்

உலங்குவானூர்தி -ஹெலிகாப்டர்

மன்னுதல் –நிலைத்தல்; உன்னுதல் –உணர்தல்; துய்ய -தூய்மையுள்ள

உவட்டா -அருவருப்பில்லாத

பொன்றாத -அழிவில்லாத

அடலேறு –வலிமையுடையவன்; கோ -அரசன்

உவரி –கடல்; உவரிநடுவே உதித்ததமிழர் –இலங்கைத்தமிழர்; உவலை –துன்பம்; அளைதல்- தழுவுதல்

மாணார் –பகைவர்; பரிசு –பண்பு.


--
அன்புடன்
அகரம்.அமுதா

http://agaramamutha.blogspot.com/
http://ilakkiya-inbam.blogspot.com/
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
http://taminglishpoem.blogspot.com/
http://thamizhchcherukkan.blogspot.com/

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (4)
மன்னிக்கவும்!
4 வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010 12:41
அகரம் அமுதா
//////அந்தாதி இரண்டாம் அத்தியாயத்தில் முதல் பாட்டில் தனிச்சொல் காரில் என இருக்க அடுத்த அடி மின்போலும் எனத் தொடங்குகிறது. நிரையில் அல்லவா தொடங்க வேண்டும்////// -மாறன்

ஆம். மாறன் அவர்களே! அத்தவறை பாடல்களை வெளியிட அனுப்பிய பிறகே கண்டேன். முன்பே கண்டுகொண்டான் என்றாலும் கூட, கவனக்குறைவாக தளைதட்டிய வெண்பாவை வெளியிட அனுப்பியமைக்கு வருந்துகிறேன். தாங்கள் சுட்டியமைக்கு என் நன்றிகள். மற்றும் தங்கள் வாழ்த்துக்கென் வணக்கங்கள்.



பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?

போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரிலெழும்

மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க

உன்போலும் ஆமோ உரை! (11)

------ என வந்திருக்க வேண்டும்.
பிழையாய் இருக்கலாம்..
3 வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010 22:21
மாறன்
அந்தாதி இரண்டாம் அத்தியாயத்தில் முதல் பாட்டில் தனிச்சொல் காரில் என இருக்க அடுத்த அடி மின்போலும் எனத் தொடங்குகிறது. நிரையில் அல்லவா தொடங்க வேண்டும். வெண்பாக்கள் மிக அருமை. தொடருங்கள். உங்கள் அந்தாதிக்கு நீண்ட வரலாற்றில் வீற்றிருக்கும்.
நன்றி!
2 செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010 13:45
அகரம் அமுதா
மதிப்பிற்குரிய ரமோனா அவர்களுக்கு! தங்களின் வாழ்த்தையும், கருத்தையும் வணங்கி ஏற்கிறேன். தாங்கள் எதிர்பார்க்கு தமிழரின் இடர், மற்றும் தீர்வுகள் பற்றிய வெண்பாக்கள் அடுத்தடுத்த வெண்பாப் பகுதிகளில் வரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் வெண்பா அருமை.!
1 திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010 13:19
ரமோனா
அற்புதமான சொல்லடுக்கிய உங்கள் வெண்பா அருமை.
ஈழத்தின் இனிமையை, இடரை, அவர்களுக்கான தீர்வை
உங்கள் வெண்பாக்கள் இனிக்கொணரட்டும்.
ரமோனா

வாசகர் கருத்துக்கள், category: "பிரபாகரன் அந்தாதி"

நன்றி கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
thanku for writting abt our leader கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
மன்னிக்கவும்! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
பிழையாய் இருக்கலாம்.. கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
நன்றி! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
நன்றி! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
கரிகாலனை கொண்டாடும் கவிதைகள் அருமை கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
உங்கள் வெண்பா அருமை.! கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 02
கவிதைச் சிறப்புக் கொண்ட கரிகாலன் வரலாறு கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்