Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

tna-meeting-with-ltte-smallமீண்டுமொரு தேர்தல் முனைப்புக்களுக்கான தளம் திறக்கப்பட்டுள்ளது. ஆரசியல் களத்தில் நான் முந்தி நீ முந்தி என கூட்டணிகளும், கருத்து வெளிப்பாடுகளும் தலை தூக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சரியான கேள்விகளுக்கான சரியான பதில்களை வழங்க வேண்டிய சூழலில் தமிழ் அரசியல்த் தலைவர்கள் இருக்கின்றார்கள்.

நாளுக்கு நாளான அரசியல் மாற்றத்தின்படியான மாறுதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உறுதியான முடிவினை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டத்தில் தற்போது களத்தில் உள்ளது. கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இன்று முக்கிய இடத்தினை வகிப்பது. கூட்டமைப்பு தொடர்பிலான மக்கள் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை கூட்டமைப்பு எடுக்க வேண்டியதாகும்.

கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் வைத்திருக்கின்ற  நம்பகத்தினை வலுப்படுத்த அல்லது உறுதிப்படுத்த கூட்டமைப்பின் தலைவரும் அதன் முக்கிய செயற்பாட்டாளர்களும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதாகவே கருதுகின்றோம்.

 

  • 1. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது பதிவினை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளல்.
  • 2. கல்விமான்களுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட யாப்பை தயாரித்து, கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இடல்.
  • 3. கூட்டமைப்புக்கு ஒற்றுமையே பலம் என்பதால், யாப்பு நடைமுறைகளை மீறிச் செயற்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை கூட்டமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
  • 4. மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்காகவும் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்காகவும் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கை எடுத்தல்.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை அடுத்த தேர்தலின் முன்பாக மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. கூட்டமைப்பு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்பிக்கப்பட்டவேளை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் தற்போதைய கூட்டமைப்பு தொடர்பான சிக்கல்களை எதிர் நோக்க வேண்டிய சூழல் எவருக்கும் ஏற்பட்டிருக்காது.

நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்ற பொழுது யாப்பைக் கூட காரணமாகக் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம். இந்த நிலையில் இந்த விடயங்களை தமது கருத்தில் எடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்.

 

இந்த விடயங்கள் கவனிக்கப்படாமல் விடுபட்டால் கூட்டமைப்பில் அங்கம் பெறும் நான்கு பிரதான கட்சிகளும் நான்கு திசைகளில் சிதறி வேறு திசைகளில் பயணிக்கும் அபாய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. குறிப்பாக பிரதானமான கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இவ்வாறான கூட்டு நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதாக அறியமுடிகின்றது. கூட்டு நடவடிக்கையின் மூலம் தமக்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகும் அபாயம் இருப்பதை நோக்காகக் கொண்டே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாறான கூட்டான நடவடிக்கை முன்னெடுக்கப்படாது விடின் தாம் தனித்துச் செயற்படும் நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்று அதற்கான தயார்ப்படுத்தல்களில் ஏனைய கட்சிகள் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.

 

இந்த நிலை ஏற்பட்டால் தமக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாமும் ஏதாவது கட்சியின் பெயரைக் கொண்டு களத்தில் குதிப்பதற்கென கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் பிசுபிசுத்தால் தாம் தனித்துப் போட்டியிடுவதென தேர்தலில் புதிதாய் குதிக்கக் காத்திருக்கும் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் சிலரும் தமது தமது முடிவினைக் கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. இந்தச் செயற்பாடுகள் சிங்களப் பேரினவாத சக்திகளின் கனவுகளுக்கு முழுவடிவம் கொடுப்பதாகவே அமைந்துவிடும்.

இவ்வாறான இக்கட்டு உண்மையில் எங்களால் உணரப்பட்டே இந்தக் கட்டுரை ஆக்கப்படுகின்றது. எனவே ஒரு ஒருமைப்பாட்டினை அனைத்து மக்களிடமும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் உட்பட்ட உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

இதற்கு அடுத்த கட்டமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் அடுத்த கட்ட பிரதானமான தெரிவு ஒன்று, இந்தக் கட்டுரையூடாக கையளிக்கப்படுகின்றது.

நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின்போது சிறுபான்மை இன மக்கள் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வெளிப்படுத்தலின் பலன் புலம்பெயர் நாடுகளில் எதிரொலித்துள்ளது.

எமது மக்களின் நலனினை இலக்காகக் கொண்டு புலம்பெயர் தளத்தில் செயற்படுகின்ற பல்வேறு அமைப்புக்கள் தாயக மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான கூடுதல் அவாவினை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கான ஏற்பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கக் கூடிய களச் சூழலில் தற்போது உள்ளது. கடந்த காலங்களில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த மக்களை சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த கூட்டமைப்பினருக்கு, விடுவிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்வையிடுகின்ற போதிலும் அவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்கக்கூடிய எந்த ஒரு நிதி வளங்களும் இல்லாத கையறுநிலை காணப்பட்டமை புலம்பெயர் மக்களால் உணரப்பட்டுள்ளது.

 

தாயக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை புலம்பெயர் மக்கள் வழங்கத்தயாராகவும் ஆவலாகவும் இருந்தாலும் பேரினவாத அரசிடம் வழங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய அமைப்பு ஒன்றினை அமைத்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் செயற்பாடுகளை முன்னெடுத்து எமது மக்களுக்கான அபிவிருத்திப்பணிகளை பாரிய அளவில் முன்னெடுப்பதற்கான தயார் நிலையில் இருப்பதாக புலம்பெயர் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களையும் இணைத்து, மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களையும் இணைத்ததான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது.

 

இந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளின் அரசியல் தலைமைகளுடன் புரிந்துணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவர்களுடன் கொள்கை அளவிலாவது இணக்கப்பாட்டிற்கு வந்து கூட்டமைப்பு செயற்படுமா? என்ற கேள்விக்கு அது என்ன பதில் சொல்கின்றது? என்று புலம்பெயர் சமூகமும், தாயகச் சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றன.

கால நீட்சியில் மாற்ற ஒழுங்குகளுக்கு அமைய சர்வதேச ரீதியாக சிறுபான்மை இனமக்களின் வாக்குப் பலத்தினை வெளிப்படுத்த சிறுபான்மை இனக்கட்சிகளுடனான ஒன்றிணைந்த செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான ஒரு சூழலாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதனைக் கொண்டு செயற்படலாம்.

கையறு நிலையில் வீழ்ந்து கிடக்கும் தாயகமக்களைத் தூக்கி நிறுத்தவும், புலம் பெயர் உறவுகளுக்கும் இலங்கையின் சிறுபான்மை இன மக்களுக்குமான உறவுப்பாலமாக செயற்படவும், இலங்கையில் உள்ள சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்தான ஒருமித்த கொள்கை நிலைபாட்டை வெளிப்படுத்தவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வருமா?

 

- இராவணேசன்-

 

 

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010 11:13 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "ஈழம்"

தேய்ந்த தமிழனே இன்னமும் நீ திருந்த மாட்டாயா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
இன்னுமொரு அணி வேண்டுமா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
innumoruani ippothu venduma? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
இன்னொரு அணி????? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
elections & tamils article of ravanesan தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
THINK ABOUT KSMIR PEOPLE தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
தேர்தலும்........................... தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்
sammanthar கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?
பிடித்த வசனம் பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு
Most of the "political leaders' are cheats கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும் !

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்