Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
coinsபரஸ்பர நிதிகள்(Mutual funds) என்றால் என்ன? அவற்றின் நிறைகுறைகள் என்னென்ன என்பன குறித்து சென்ற கட்டுரையில் கண்டோம். நாம் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாக இருந்தால், சரியான பரஸ்பர நிதியத்தினைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

பரஸ்பர நிதியங்களைத் தேர்ந்தெடுப்பதில் பல நிலைகள் இருக்கின்றன. உங்கள் இலக்குடன் அந்த நிதியத்தின் திட்டம் ஒத்து வருகின்றதா? நிகர சொத்து மதிப்பு (NAV) என்ன? அவர்களின் செயல்பாடு கடந்த வருடங்களில் எப்படி இருந்தது? அவர்கள் கொடுக்கும் பங்காதாயம் எவ்வளவு? குறைந்த பட்ச Lock in Period எவ்வளவு? அவர்கள் கட்டணங்கள் எப்படியுள்ளன? நிதியத்தின் குறைந்த அளவு முதலீடு என்ன? அவர்கள் எந்தவிதமான பங்குகளில் எந்த விகிதத்தில் முதலீடு செய்கிறார்கள் என்ற ஏராளமான கேள்விகளுக்கு நீங்கள் விடை தெரிந்துகொண்டு ஒரு பரஸ்பர நிதியத்தின் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.

முதல் படி: உங்கள் இலக்குடன் அந்த நிதியத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் திட்டத்தின் இலக்கு ஒத்திருக்கிறதா? அதாவது உங்கள் இலக்கு நீண்டகால, பாதுகாப்பான சேமிப்பு என்று வைத்துக்கொள்வோம். அந்த நிதியத்தின் திட்டம், பங்குச் சந்தையில் சமநிலைப்பங்குகளில் அதிகம் முதலீடு செய்கிறதா? கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். கடன் பத்திரங்களில் செய்கிறது என்றால் அது உங்கள் இலக்குடன் அதாவது பாதுகாப்பான, நிலையான வருமானம் தரும் முதலீட்டில் ஈடுபடுகிறது. இதுவே அதிகமான 'ஆப்ஷன்ஸ், ஃப்யூச்சர்களிலும், ஈக்விடி பங்குகளிலும் முதலீடு செய்யுமானால் அது உங்கள் இலக்கிற்கு சம்பந்தமில்லாத முதலீட்டுத் திட்டம்.

இரண்டு : கடந்தகால செயல்பாடுகளை மதிப்பிடுங்கள். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும்பொழுது யாராக இருந்தாலும் நல்ல வருமானத்தை ஈட்டலாம். ஆனால் சந்தையின் சரிவின்பொழுது ஒரு நிறுவனம் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவேண்டும். சந்தைப்போக்கு காளைப்போக்காக இருக்கையில் 30 முதல் 40 சதம் வரை லாபம் ஈட்டிவிட்டு கரடிச்சந்தைப் போக்கின் பொழுது ஒரு நிறுவனம் நட்டமடைந்துள்ளதாகக் கொள்வோம். மற்றொரு நிறுவனம் எல்லாக் காலங்களிலும் சராசரியாக 15 முதல் 25 சதம் வரை லாபம் ஈட்டியிருப்பதாக எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? கண்டிப்பாக இரண்டாவதைத் தானே?

அது மட்டுமல்ல. ஒவ்வொரு நிதியமும் பல திட்டங்களை வைத்திருக்கும். இதில் குறுகிய காலத்திட்டங்களில் நன்கு செயல்பட்டவை என்னென்ன, நீண்ட காலத்திட்டங்களில் நன்கு செயல்பட்டவை எவை, 3 முதல் 5 வரையான வருடங்களில் நன்முறையில் லாபம் ஈட்டியவை எவை என்பதையெல்லாம் அலசி, சராசரியாக அனைத்துத் தரப்பிலும் லாபகரமாக இருந்த நிறுவனம் எதுவோ அதில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஏனெனில் ஒத்த, சீரான் (consistent) லாபம் நல்ல அனுபவமும், செயல்திறனும் உள்ள நிதிநிர்வாகிகள் அந்த நிறுவனத்தில் இருப்பதைக்குறிக்கிறது.

பரஸ்பர நிதியங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த வகையான பங்குகளில், எத்தகைய விதமாகச் செயல்பட்டுள்ளன எனவும் ஒத்திட்டு நோக்க வேண்டும். உதாரணமாக, மென்பொருள் நிறுவனங்களில் ஒரு நிதியம் மேற்கொண்ட குறுகியகால முதலீடு லாபம் ஈட்டியுள்ளதைக்கொண்டு, நாளை கட்டுமானத் திட்டங்களில் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் முதலீடுகளும் லாபமே அடையும் என்று கருதுவது இயலாது. அவ்வாறே எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த அளவுகளில் பொதுவாக அவர்களால் திரட்டப்பட்ட நிதியானது முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்ளுதல் அவசியம்.

அதேபோல், சமீபத்தில் நிறுவனத்தைத் தொடங்கி, ஏராளமான லாபம் காட்டிவரும் நிறுவனங்களை விட, பல வருடங்களாக நிலைத்திருக்கும் நிதியங்களில் முதலீடு செய்வது நல்லது. பலவிதமான சந்தை நிலவரங்களையும், காளைப்போக்கு, கரடிப்போக்கு, கோழிப்போக்கு, அமைதியான சந்தை, ஆர்ப்பரிக்கும் சந்தை எல்லாவற்றையும் பார்த்து எதிர்நீச்சல் போட்ட நிறுவனங்கள் எப்பொழுதும் பாதுகாப்பானவை. "Old is Gold" அல்லவா?

அடுத்தபடியாக ஒரே ஒரு பரஸ்பர நிதியத்தில் தமது அத்தனை முதலீட்டையும் செய்வதை விட, நல்ல நிறுவனங்கள் என்று கருதும் இரண்டு அல்லது மூன்று நிதியங்களில் தமது முதலீட்டைப் பகிர்ந்து போடுவது சாலச் சிறந்தது. இதனால் உங்கள் பணம் 'Diversify' ஆகிறது.

நீங்கள் ஒரு நிதியத்தைத் தேர்ந்தெடுக்குமுன் அதன் நிர்வாகம் யாரிடம் உள்ளது என்று தெரிந்துகொள்வது முக்கியம். முன்பின் தெரியாத நிறுவனங்களில் பணத்தைப் போடுவதை விட, பல வருடங்களாக அனுபவம் பெற்ற நிறுவனங்களின், கீழ் இயங்கும் துணை (Subsidiary) நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது.

ஒரு பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர், அவர்கள் கட்டண விகிதங்கள், செலுத்த வேண்டிய குறைந்தபட்சத்தொகை, குறைந்தபட்சம் எத்தனை காலம் நிதி முடக்கப் படவேண்டியிருக்கும் முதலியவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அங்கு முதலீடு செய்யலாமா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும்.
முக்கியமான ஒன்று, நீங்கள் ஈக்விடி பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் பொறுமையாக இருப்பது அவசியம். குறுகிய கால லாபத்தைப் பார்க்காமல் நீண்ட கால லாபத்தை மனதில் கொள்ளுங்கள். அடிக்கடி ஒரு நிதியில் இருந்து எடுத்து மற்றொன்றில் போடுவது, அடிக்கடி நிறுவனத்தை மாற்றுவது இவை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது. அது பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பதற்கு ஒப்பானது.

(பின் குறிப்பு: ஒரு நண்பர் பரஸ்பர நிதியங்கள் மூழ்கவே மூழ்காது என்பது உண்மையா என்று கேட்டிருந்தார். பொதுவாக, பங்குகளில் இருக்கும் அபாயத்தை விட பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடு பாதுகாப்பானது. அவர்கள் நம்மிடமிருந்து பணம் திரட்டி, பங்குச்சந்தையில்தான் போடுகின்றனர் என்றாலும், அதிக அளவில் திரட்டப்படும் நிதி பங்குச் சந்தை(Stock Market), பணச்சந்தை(Money Market), கடன் சந்தை(Debt Market) போன்ற பலவற்றிலும் ஈடு படுத்தப் படுகிறது. எந்த ஒரு நிறுவனமானாலும் அதில் வெற்றி தோல்விகளுக்கான வாய்ப்பு அங்கு பணி புரிபவரைப் பொறுத்தது. ஒரு சிறந்த நிதி நிர்வாகியை (Fund Manager) உடைய பரஸ்பர நிதி கிட்டத்தட்ட வாத்துக்கு ஒப்பானதுதான்.)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 06 ஜனவரி 2010 12:22 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
London stoke market
1 வெள்ளிக்கிழமை, 08 ஜனவரி 2010 11:18
Prathees
Dear பாலகார்த்திகா

You are writing well ,why don’t want to write about Stock market any more ?Kindly write about London stoke market Please. I got many question about stock market Thank you

வாசகர் கருத்துக்கள், category: "வணிகம்"

London stoke market சரியான பரஸ்பர நிதியத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
FOREX TRADING பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
பங்குவர்தகம் பங்கு வணிகத்தில் செய்யும் பொதுவான தவறுகள்
AGENCY DETAILS பங்குச் சந்தையின் வகைகள்
Insider trading உள்ளிருப்போர் வர்த்தகம் - பங்கு வர்த்தக மோசடி
பங்கு சந்தை பற்றிய ஆலோசனை அருமை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள்
eelanation க்கு நன்றி ! பங்கு வர்த்தகத்தின் வகைகள்
VILAKATIKU பங்கு வர்த்தகத்தின் வகைகள்

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்