Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி

மின்னஞ்சல் அச்சிடுக PDF

moneyஇத்தொடரைத் தொடங்குகையில் இணையத்தில் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றிப் படிப்படியாக விளக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்தேன். இணையத்தில் பணம் சம்பாதிப்பது குறித்த அறிமுகக்கட்டுரையையும், கூகிள் ஆட்சென்ஸ் குறித்த கட்டுரையையும் படித்த பல வாசகர்கள், இணையத்தில் வேலை செய்ய யாரை அணுகவேண்டும் என்ற கேள்வியையே பிரதானமாகக் கேட்டிருந்தனர்.

அவர்களுக்காக, கூகிள் ஆட்சென்ஸ் குறித்த மேலும் பல விவரங்களை அளிக்குமுன்பு, விரைவாகவும், சுலபமாகவும், அவரவரது திறமைக்கேற்றபடியும் சம்பாதிக்கப் பல வழிகள் கொண்ட ஒரு இடத்தைப் பற்றி முதலில் பார்க்கப் போகிறோம். இது, இணையத்தில் சம்பாதிக்க விரும்பி, முதன்முதலாக இதற்குள் அடியெடுத்து வைப்பவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய ஒரு அருமையான வழி.

உங்களில் சிலர் அருமையான ஆங்கிலக் கட்டுரைகளை எழுத வல்லவர்களாக இருக்கலாம். சிலர், கணிணி அறிவு உடையவர்களாக இருக்கலாம். சிலர் முழு நேரமாக வேலை பார்க்க விரும்பலாம். சிலரோ, கூடுதல் வருவாய்க்கான பகுதி நேர வேலை தேடுபவர்களாக இருக்கவும் கூடும். ஓய்வு பெற்றவர்கள், படித்துக்கொண்டே வேலை பார்க்க நினைப்பவர்கள், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, உபரி வருமானம் தேட எண்ணும் பெண்கள் யாராக இருப்பினும் அவர்களுக்குப் பயன் தரும் ஒரு இணைத்தளம் இது. அதுவே "www.fiverr.com" என்னும் இணைத்தளம்.

"Fiverr" பல்வேறு திறனுடைய மக்களும், பல்வேறு இணைத்தள சேவைகளை தமது நிறுவனத்திற்காக நாடுகின்ற மக்களும் சந்திக்கும் சந்தையைப் போன்றது என்று கூறலாம். பல நாடுகளிலும், இப்பொழுதெல்லாம் ஒருவரை நேரடியாக முழுநேர வேலைக்கு அமர்த்துவதில்லை. 'Outsourcing' என்பது உலகமுழுவதும் பிரபலமாக உள்ள காலகட்டம் இது. தமக்குத் தேவைப்படும் சிறு சிறு வேலைகளை எளிதில் நிறைவற்றிக்கொள்ளவும், சில சிமயங்களில் சிறப்பு ஆலோசனைகளைப் பெறவும் விரும்பும் தனிநபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் இதற்கென உள்ள பல இணைத்தளங்களுக்கு வந்து தம்மைப் பதிவு செய்துகொண்டு தமது தேவைகளைத் தெரிவிக்கின்றன. அதே போல், இணைத்தளம் மூலம் பணி புரிந்து சம்பாதிக்க விரும்புபவர்களும் அங்கே தம்மைப் பதிவு செய்துகொண்டு தமது திறன்களைக் குறித்த விவரங்களை அளிக்கின்றனர். அது மட்டுமல்ல, தமக்கு ஏற்ற வேலை இருப்பின் அவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், உங்கள் சேவை தேவைப்படுகின்றவர்கள், உங்களது 'Profile'ஐப் பார்த்துவிட்டு உங்களுக்கு வேலை கொடுக்கலாம். "Fiverr" இதைப்போன்ற ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும் 'Intermediary' அல்லது 'Facilitator' வடிவில் செயல் படுகிறது.

இதன் சிறப்பு என்ன?

இதில் எந்தச் சேவையையும் ஐந்து டாலருக்கு வாங்கவோ விற்கவோ செய்யலாம். நீங்கள் ஒரு வேலையை ஐந்து நிமிடத்தில் செய்து முடித்தாலும் சரி அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் சரி, செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் உங்களுக்கு ஐந்து டாலர்கள் கிடைக்கும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. அது மட்டுமல்ல, நீங்கள் இணைத்தளப்பணிகளில்தான் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டுமென்பதும் இங்கு இல்லை. நீங்கள் மிக அழகாகப் புகைப்படம் எடுக்கக் கூடியவராக இருந்தால், நாள்காட்டிகளுக்கும், இணைத்தளங்களில் பின்புலங்களுக்கும் பயன்படும் வகைகளில் புகைப்படம் எடுத்துத் தந்து சம்பாதிக்கலாம். உங்களுக்குக் கவிதை எழுதத்தெரியுமா, அதற்கும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. விளம்பரப்பாடல்கள் (Jingles) உருவாக்கவும், பொருட்களுக்கும் நிறுவனங்களுக்கும் நல்ல கவர்ச்சிகரமான பெயர்கள் வைக்கவும் தேவையான கற்பனைத்திறன் உடையவரா? அட அது கூட வேண்டாம்.... உங்களுக்குத் தெரிந்த ஒரு மொழியைக் கற்றுக்கொடுத்துக்கூட நீங்கள் சம்பாதிக்கலாம். பின்னணி இசை சேர்த்தல், இசை அமைத்தல், "PowerPoint Slide Show" தயாரித்துக் கொடுப்பது, இவ்வளவு ஏன்! மனைவிக்கோ/ கணவனுக்கோ என்ன பரிசுகள் கொடுக்கலாம் என்று குழம்புபவருக்கு புதிய புதிய ஆலோசனை வழங்குவது கூட இங்கு ஒரு சேவைதான். உங்கள் ஒவ்வொரு திறனையும், இத்தளத்தில் டாலராக மாற்றலாம். உங்களிடம் பல்வேறு திறன் இருந்தால் உங்கள் திறன் ஒன்றையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு 'gigs' என்று பதிவு செய்துகொள்ளலாம். (உங்கள் திறனைக் குறிப்பிட்டு நீங்கள் தயாரித்துப் பதிவு செய்வது 'gigs' என்று இத்தளத்தில் அழைக்கப் படுகிறது.) ஆர்வமூட்டக்கூடியதாகவும், எளிதில் முடிக்கக் கூடியதாகவும் உள்ள 'gig'களை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இத்தளத்தில் பதிவு செய்துகொள்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

இந்த இணைத்தளத்தின் மூலம் பணிபுரிவது எப்படி? அதன் விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

1. இத்தளத்தில் உங்கள் 'gigs' ஐ இடுகை செய்ய வேண்டுமாயின் நீங்கள் அதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளுதல் அவசியம். அதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, பயனாளர் பெயர், கடவுச்சொல் இவற்றைக் கொடுத்து பதிவு செய்யவேண்டும்.
2. ஒவ்வொரு சேவைக்கும் கிடைக்கக்கூடிய கட்டணம் $5 எனினும், இந்த இணைத்தளத்திற்கான கட்டணம் போக உங்களுக்குக் கிடைக்கக் கூடியது $4 ஆகும்.
3. இதில் வேலை செய்து கொடுக்கிறோமே, பணம் ஒழுங்காகக் கிடைக்குமா என்ற கவலை வேண்டாம். உங்களுக்கு வேலை தருபவர் முதலில் இந்த இணைத்தளத்தில் பணத்தைச் செலுத்திவிடவேண்டும். நீங்கள் வேலை செய்து முடித்தவுடன் பணம் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும். வேண்டியபொழுது நீங்கள் உங்கள் 'Paypal' கணக்கிற்கு அதை மாற்றி எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக $40 சேர்ந்தபின் பணத்தை எடுக்கலாம்.

யாராவது உங்கள் 'gigs' சேவை எவற்றையேனும் நாடினால், உங்களுக்கு அதன் விவரம் கொடுக்கப்படும். அந்தப் பணியை ஏற்றுக்கொள்வதோ, மறுப்பதோ உங்கள் விருப்பம். ஆனால் 24 மணி நேரத்திற்குள் உங்கள் முடிவை நீங்கள் தெரிவிக்கவில்லையெனில் அந்தக் கோரிக்கை இரத்தாகிவிடும். எவ்வளவுக்கெவ்வளவு வேகமாகவும், தவறின்றியும் வேலையைச் செய்துமுடிக்கிறீர்களோ, அதற்கேற்றவாறு உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்களின் நேர்மறையான பின்னூட்டம் (Positive Feedback) கிடைக்கப்பெறும். குறைந்தபட்சம் இருநூறு முறை உங்கள் 'gigs' பார்வையிடப்பட்டு, நீங்கள் சில வேலைகளையும் நல்ல பின்னூட்டத்தையும் (Feedback) பெற்றிருப்பின், "Fiverr" இல் உங்கள் 'gigs'ஐ முதன்மைப்படுத்தி, 'Featured' எனக் குறியிட்டு முதல் பக்கத்தில் வெளியிட வாய்ப்புண்டு. இதனால் பார்வையாளர்கள் உங்கள் gigs'ஐப் பார்க்கும் வாய்ப்பும், உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இணையத்தில் மூலம் சம்பாதிக்க மேலும் பல வழிகளுடன் மீண்டும் சந்திப்போம். அதுவரை, தற்போதைய உங்கள் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (5)
பகுதி நேர வேலை வேண்டும்
5 திங்கட்கிழமை, 06 செப்டம்பர் 2010 16:33
வீக்டோரியா
எனக்கு நல்லா தட்டச்சி தெரியும். ஆதலால் எனக்கு அப்படிபட்ட வேலை வேண்டும்.நான் வீட்டிலிருந்தே வேலை செய்ய உதவுங்கள்.
parttimejaob
4 புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 23:41
saravanan
best subject iwanta adress
முழு நேர வேலை வேண்டும
3 ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 16:20
ஜெயவேலு
எனக்கு வீட்டில் இருந்து சம்பாதிக்க வேலை வேண்டும்.
This is an easy way
2 வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010 20:33
Kaviyan
This is an easy way to earn money from your home. Just click the following link and register there.
http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=Kaviyan
Latest update at fiverr.com
1 செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2010 19:58
Pradeep
Fiverr has removed $40 withdrawal limit.
You can now withdraw your amount immediately when they are cleared.
No need to wait till you accumulate $40 each time.

வாசகர் கருத்துக்கள், category: "கணிணிக்கல்வி"

HOW TO EARN MONEY இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க வழிகள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க வழிகள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
Regarding earn mony இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகுதி நேர வேலை வேண்டும் ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி
வாழ்து உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
earn money இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையதளத்தில் சம்பாதிக்கும் வழி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
how to earn money இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
money இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி