Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

நினைக்கத்தெரிந்த மனமே!!!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
Forgetமறதி குறித்த ஏராளமான நகைச்சுவைத்துணுக்குகள் உலகமெங்கும் உலவுகின்றன. சொல்லப்போனால், நினைவாற்றல் எவ்வளவு நமக்கு உதவுகிறதோ அதே அளவு மறதியும் நமக்கு உதவிதான். இல்லையெனில் நம் வாழ்வில் நடந்து முடிந்த துன்பகரமாக, அதிர்ச்சி தரக்கூடிய, பயங்கரமான நினைவுகள் நம்மை நாள்தோறும் துரத்திக்கொண்டுதான் இருக்கும். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையும் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழமுடிவது, சில விஷயங்களை நாம் மறக்க இயலுவதால்தான்.
ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பல செயல்களைச் செய்ய மறப்பது, தேர்வில் கேள்விக்கான விடைகளை மறந்து விடுவது, முக்கியமான தகவல்களை மறப்பது முதலியன நம் தொழில் வெற்றிக்கு மட்டுமல்லாது, சொந்த வாழ்விலும் பல சிக்கல்களை உருவாக்கிவிடக்கூடும். மறதி அனைவருக்கும் இயல்பானதுதான் என்றாலும் அதிகப்படியான மறதி அவதிக்குள்ளாக்கிவிடும். நினைவாற்றல் அதிகம் இருப்பது எப்பொழுதுமே மற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெறவும், அலுவலகத்தில் நன்மதிப்பு அடையவும், பொதுவாக வேலைகளைக் குறித்த காலத்தில் செய்து முடிக்கவும் உதவிகரமாக இருக்கும்.

நமது மறதியைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்த முடியுமா? முடியும்... கண்டிப்பாக முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? கத்தியைத் தீட்டாதே மனிதா புத்தியைத் தீட்டு என்று ஒரு பாடல் இருக்கிறதல்லவா? அது போல்தான்.
உடல் கட்டாக, சீராக, உறுதியாக இருக்கவேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு நினைவாற்றல் அதிகரிக்க, மூளைக்குத் தொடர்ந்து பயிற்சியளிப்பது முக்கியம். நமது மூளை அளவற்ற சக்தியினை உடையது. சராசரி மனிதர்கள் தமது மூளையின் ஆற்றலில் ஐந்து முதல் பத்து சதவீதம் மட்டுமே உபயோகிக்கின்றனர். இதுவரை அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மட்டுமே தமது மூளையின் சக்தியை அதிக அளவு பயன்படுத்தியவராகக் கருதப்படுகிறார் (பதினைந்து முதல் இருபத்தைந்து சதவீதம்). எனவே நாம் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் மூளையின் ஆற்றலும் செயல் திறனும் அதிகரிக்கிறது.

நினைவு என்பது மூளையில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் தகவலை, மீட்டெடுக்கும் நிகழ்வு. அவ்வளவுதான். உங்கள் அலுவல் அறை அல்லது சமையல் அறையில் உள்ள பொருளை நீங்கள் எடுக்கவேண்டும் என்றால் நீங்கள் அந்த இடத்தை எப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறீர்கள், எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன, எவ்வளவு நாட்களுக்கு முன் வைத்தீர்கள் என்பதை எல்லாம் பொறுத்துத்தானே அதை எடுக்கத் தேவைப்படும் நேரம் கூடவோ குறையவோ செய்யும்? இதேதான் மூளைக்கும் பொருந்தும்.

நினைவாற்றலை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று - குறுகிய கால அல்லது தற்காலிக நினைவு. மற்றொன்று நீண்ட கால அல்லது நிரந்தரமான நினைவு. குறுகிய கால நினைவினை நாம் நமது கணிணியில் உள்ள 'RAM'க்கு ஒப்பிடலாம். சற்று முன் பேருந்தில் பார்த்த பெண்ணின் உடையின் நிறம், கடையில் வாங்கிய ஒரு பொருளின் விலை, சற்றுமுன் அழைத்த வாடிக்கையாளர் சொன்ன கணக்கு எண் முதலானவை இவ்வகையில் அடங்கும். தொடர்ந்து வேறு பணிகளைச் செய்கையில் இது மறந்துபோய் மற்ற தகவல்கள் உங்கள் மூளையில் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதிகப்படியாக ஏழு முதல் பத்துத் தகவல்களை மூளை தற்காலிக நினைவுப்பகுதியில் பதிந்துகொள்கிறது.

நீண்டகால நினைவுகள் என்பது நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாலோ, வேண்டுமென்றேயோ மனதில் பதித்து வைத்துக்கொள்வது. பாடங்கள், மொழி, சொற்கள், குடும்ப உறவினர் பெயர்கள், அலுவலகத்தின் செயல்பாட்டு முறைகள், திட்டங்கள் முதலியன இவற்றுள் அடங்கும். அது மட்டுமின்றி நீங்கள் புழங்கும் அல்லது சென்று வரும் இடங்கள், பழகும் பலவித மனிதர்கள், நீங்கள் பார்த்த திரைப்படம், விரும்பும் பாடல்கள் இவை அடிக்கடி உங்களால் பயன்படுத்தப் படுவதால் பொதுவாக உங்கள் நிரந்தர நினைவில் பதிந்து விடுகின்றன.

நினைவாற்றலை வளர்க்க என்ன செய்யலாம்?
ஆங்கிலத்தில் "Use it or Lose it" என்பார்கள், பயன்படுத்து அல்லது இழந்துவிடு என்பது இதன் பொருள். மூளையும் தொடர்ந்து வேலைகொடுத்துக்கொண்டே இருந்தால் அதிகக் கூர்மையாக இருக்கும். பயன்படுத்தாத ஆயுதங்களும், இயந்திரங்களும் துருப்பிடிப்பது இயல்புதானே?

பொதுவாக நாம் எதையும் மறப்பதற்குக் காரணம் நாம் அதன் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது தான். எனவே எதையாவது படிக்கையில், யாராவது பேசுகையில் நமது முழு கவனத்தையும் அதன் மீது வைப்பது அவசியம். கவனமின்மை மறதியின் நண்பன், நினைவாற்றலில் எதிரி. கூர்ந்து கவனிக்கப் பழகவேண்டுமானால் காலையில் குறைந்த பட்சமாக பத்து நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. தியானம் என்பது, கடவுளுடன் தொடர்புடையது அல்ல, நமது மனத்துடன் தொடர்புடையது. தியானம் நமது வேண்டாத சிந்தனைகளைக்குறைப்பதன் மூலம், மூளையில் நாம் சேமித்து வைத்திருக்கும் தேவையில்லாத தகவல்களைச் சுத்தம் செய்து நம் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

நீங்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களை உங்களுக்கு விருப்பமான முறையில் சேமியுங்கள். சிலருக்கு எண்களை நினைவு வைத்துக்கொள்வது எளிது, சிலருக்குப் பெயர்களை நினைவில் இருத்துவது எளிது. உங்கள் தகவல்களை உங்களுக்கு எளிதான முறையில் சேமித்துக்கொள்ளுங்கள்.

அதிக அளவு வழிகளில் தகவல்களைச் சேமியுங்கள். உங்களிடம் ஒரு தகவல் தரப்படுகிறது எனக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, உங்கள் தோழி அல்லது நண்பர் தனது வீட்டு முகவரியைச் சொல்கிறார் எனில், அதைக் கேட்கும்பொழுதே ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள். அதை ஓரிரு முறை வாய்விட்டுப் படியுங்கள். உங்கள் கணிணியில் ஒரு கோப்பினைத் திறந்து அதைத் தட்டச்சு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் காதுகள், கண்கள் கைகள் எல்லாவற்றின் மூலமாகவும் அத்தகவல்கள் உங்கள் மூளையைச் சென்றடைவதால் அந்த முகவரியை அனேகமாக நீங்கள் மறக்க மாட்டீர்கள்.

ஏற்கனவே அறிந்த ஒரு தகவலுடன் இதைத் தொடர்பு படுத்துங்கள். "என் பெயர் ராகுல்." என்று ஒருவர் சொன்னால் நீங்கள் அதை கௌதம புத்தரின் மகன் ராகுலன், பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இதுபோல் தொடர்பான தகவல்களை மனதில் ஓட விட்டுக்கொண்டீர்களானால் அத்தகவலும் எளிதில் மறக்காது.

மிக முக்கியமான தகவல்கள், சூத்திரங்கள், முக்கியமான நாட்கள் இவற்றை அடிக்கடி பார்க்குமிடங்களில் எழுதி வைத்திருப்பது, உங்கள் மனதில் அவ்விஷயம் பதிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மிகவும் பெரிய, குழப்பமான தகவல்களை நினைவு வைத்துக்கொள்ள அதை பல பிரிவுகளாகப் பிரித்துப் புரிந்துகொண்டு பின் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது, சொல்லிப்பார்ப்பது இவையும் மனதில் பதியப் பயன்படும்.

இவை அனைத்துக்கும் மேலாக, எப்பொழுதும் 'எனக்கு நினைவாற்றல் குறைவு, நான் மறந்துவிடப்போகிறேன்' என்று நினைக்கவே நினைக்காதீர்கள். உங்கள் ஆழ்மனம் நீங்கள் நினைப்பதை நடக்க வைக்கும் கற்பக மரம். கற்பக மரத்தின் அடியில் நின்று கொண்டு எனக்கு அறுசுவை உணவு வேண்டும் என்று கேட்டாலும் நடக்கும். என்னை இப்பொழுது புலி தின்றுவிடும் என்று நினைத்தாலும் நடக்கும். நமது ஆழ்மனத்தின் ஆற்றலும் அத்தகையதுதான். எனவே 'இது எனக்கு மறக்கவே மறக்காது, எனது நினைவாற்றல் மேம்பட்டு வருகிறது' என்று தன்னம்பிக்கையுடன் அடிக்கடி சொல்லி வாருங்கள். கண்டிப்பாக உங்கள் நினைவாற்றல் மேம்படுவதை உணர்வீர்கள்.
 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "பொதுக்கல்வி"

சோம்பல் ஒரு சோக ராணி சோம்பல் ஒரு சோக காரணி
நல்ல கதை சோம்பல் ஒரு சோக காரணி
Very Intersting article கை கொடுக்கும் கை
Very Intersting கை கொடுக்கும் கை
பைந்தமிழும் கணிதமும் பைந்தமிழும் கணிதமும்
பைந்தமிழ்??? பைந்தமிழும் கணிதமும்
ஓர் ஐயம் பைந்தமிழும் கணிதமும்
பைந்தமிழும் கணிதமும் பைந்தமிழும் கணிதமும்
தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
மிக உயர்ந்த தந்தை தந்தை மகற்காற்றும் உதவி

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி