Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது பகுதிகள் ) 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களவர் – தமிழர் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து சண்டை பிடிக்கத் தொடங்கினர். சிங்களவரை இலங்கை தேசிய காங்கிரஸ் சார்ப்பு படுத்தியது. தமிழர் சார்பாக சேர்.பொன். இராமநாதன் இருந்தார்.

இலங்கைக்கு என்றோ ஒரு நாள் தன்னாட்சி (self-rule) அல்லது சுதந்திரம் கிடைக்கும் என சிங்களத் தலைவர்கள் நினைக்கவில்லை. தன்னாட்சி பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் உடன்பிறப்புக்களே முதலில் உண்டாக்கினார்கள்.

sir-pon-ramanathan1917 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 2 ஆம் நாள் கொழும்பு விக்டோரியா மண்டபத்தில் இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமரவிக்கிரம தலைமையில் பொன். அருணாசலம் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் புகழ்வாய்ந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பினை விடுத்தவர் ஏரிக்கரை செய்தித்தாள் நிறுவனத்தின் தொடக்குனரும் இலங்கைத் தேசிய சங்கத்தின் செயலாளருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.

இலங்கைத் தேசிய சங்கம் 1888 இல் சிங்கள கரவா சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சங்கமாகும்.

குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தின்போது சாதி தொழில் என்பவற்றுக்கு இடையில் இருந்த தொடர்பு மறையத்தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிங்களவரிடையே காணப்பட்ட படிமுறை சமூக அமைப்பில் கொய்கம (goyigama) என்ற சாதியே உயர்சாதியாகக் கருதப்பட்டது. அந்தச் சாதியினரே பெரும்பான்மையாகவும் (51விழுக்காடு) இருந்தார்கள். இந்த சாதியினர் இடையிலும் நிலக்கிழார்கள் "முதல்தர சாதி" ஆகக் கருதப்பட்டனர். இவர்கள் ஏனைய சாதாரண கொய்கம சாதியாரோடு தம்மைப் பிரித்து "றடல" (Radala) எனத் தங்களை அழைத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் படிமுறை சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கரவா சாதியினரும் பணமும் செல்வாக்கும் படைத்தவர்களாகக் காணப்பட்டார்கள். றொபேட்ஸ் (Roberts) என்ற ஆங்கிலேயர் இருபதாம் நூற்றாண்டில் இலங்கை பற்றிய பார்வைகள் (Twentieth Century Impressions of Ceylon) என்ற நூலில் கரவா, துராவ மற்றும் சலாகம சாதியினர் மக்கள் தொகையில் 31 விழுக்காடாக இருந்தனர் என எழுதியுள்ளார்.

இந்த மூன்று சாதிகளிலும் தமிழ்க் கலப்பு இருக்கிறது பலருக்குத் தெரியாத சங்கதியாகும். குறிப்பாக சலாகம சாதியினர் ஒல்லாந்தர் காலத்தில் கருவாப்பட்டை உரிக்கத் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் ஆவர். இன்று சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்குபவர்களில் இவர்களே முதல் இடம் வகிக்கிறார்கள்.

தென்னிலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாகத் நிலக்கிழார் பின்னணியையும் பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொய்கம மற்றும் கராவ சாதியினர் தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார்கள்.

1833 – 1912 வரையிலான காலப்பகுதியில் சட்டவாக்க சபை பெரும்பாலும் எத்தகைய சீர்திருத்தத்துக்கும் உட்படவில்லை. இதில் பெரும்பான்மை 9 மூத்த அரச அதிகாரிகளும் 6 சிறுபான்மை அரசபற்றற்ற (Unofficial) உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அரசபற்றற்ற உறுப்பினர்கள் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருந்து நியமனம் செய்யப்பட்டார்கள். சிங்களவர்களை சார்புபடுத்திய உறுப்பினர்கள் எப்போதுமே கொய்கம சாதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். இதனை விரும்பாத கராவ முதலாளிகள் 1882 இல் இலங்கை வேளாண்மைச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த அமைப்பே 1888 இல் இலங்கை தேசிய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1888 இல் இந்தச் சங்கம் சட்டவாக்க சபைக்குள் நுழைய முற்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்த இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்தான் பொன். அருணாசலம் "எங்களது அரசியல் தேவைகள்" (Our Political needs) என்ற தலைப்பில் உரை ஆற்றினனார். அந்த உரை அரசியலில் இலங்கை அடைய வேண்டிய முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டியது. இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்ட போது மத்திய தர சிங்களவர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு மே மாதத்தில்தான் இலங்கைச் சீர்திருத்த சங்கமும் அவரது தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது.

பொன். அருணாசலம் அவர்களது உரையால் மிகவும் கவரப்பட்ட இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் சேர் ஜேம்ஸ் பீரிஸ் இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அந்த உரையைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த உரையை மட்டுமல்ல பொன். அருணாசலம் அவர்களது ஏனைய வெளியீடுகளையும் படிக்குமாறு வற்புறுத்தினார்.

பொன். அருணாசலத்தின் உரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜேம்ஸ் பீரிஸ் "அரசியல் சீர்திருத்தம் பற்றி பலர் கூறினாலும் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே இடைவிடாத கட்டுப்பாடான கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்ற அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னார்." என எடுத்துரைத்தார்.

1921 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ், 1920 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சபைக் கட்டளைக்குத் தீர்மானம் மூலம் திருத்தம் ஒன்றை முன்வைத்தது. அதன் அடிப்படையில் சட்டவாக்குச் சபை 45 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் 6 அரசசார்பு உறுப்பினர்கள், 28 உறுப்பினர்கள் ஆட்புல, வகுப்புவாரி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவகளாக இருப்பர். மூன்று அமைச்சர்கள் சட்டவாக்க சiபியில் இருந்து நிறைவேற்றுக் குழுவுக்கு (Executiv Council) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக சேர்.பொன். இராமநாதன் சிறுபான்மைத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு விண்ணப்பத்தை குடியேற்ற நாட்டுச் செயலருக்கு அனுப்பி வைத்தார். அதில் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஓரளவு மாற்று யோசனைகளை முன்வைத்தார். நிறைவேற்றுச் செயற்குழுவில் சிறுபான்மையினரது குரல் கேட்கப்பட வேண்டும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரது நலங்கள் பேணப்பட வேண்டும் என்பதே அந்த யோசனைகளாகும்.

ஆனால் இலங்கை தேசிய காங்கிரசின் பேச்சாளர் இ.டபுள்யூ பெரேரா கூட்டு விண்ணப்பத்தை "புகழற்றது" (Infamous) என இழிவு படுத்தினார்.

பொன். இராமநாதன் அனுப்பிய கூட்டு விண்ணப்பத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"ஆட்புல பிரதிநித்துவம் பற்றி விரிவாக ஆராய்ந்த போது தமிழ்ப் பேராளர்கள் தங்களது சிங்கள கூட்டாளிகள் (சில விதிவிலக்கு உட்பட), சிங்கள மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளை உருவாக்கி ஏனையோரது சார்பாக எழும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து தமிழ்ப் பேராளர்களும் தமிழ் அமைப்புக்களும் விலகியதோடு தங்களது ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்தன. இதன் பிற்பாடு காங்கிரஸ் தமிழர்களை சார்புபடுத்தும் தகைமையை இழந்துவிட்டது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை தோற்றுவித்தவரும் அதன் முதல் தலைவருமான எனது உடன் பிறப்பு அருணாசலம் 1920 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதில் இருந்து விலகிவிட்டார்.

டிசெம்பர் 14 ஆம் நாள் இலங்கை ரைம்ஸ் (Times of Ceylon) செய்தித்தாளுக்கு அருணாசலம் கொடுத்த செவ்வியில் "இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் சார்பு படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது. சிங்களவர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையில் ஆளுக்கு ஆள் இருந்த நம்பிக்கையும் ஒத்துழைப்பும் சுக்கு நூறாகிவிட்டது. காங்கிரசின் அதிகார தன்மானமும் உடைந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.

தமிழில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி உண்டு. சிங்களத் தலைவர்களிடம் இருந்து எழுந்த தமிழின எதிர்ப்பு சமிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் முழுதாகப் புரிந்து கொள்ளத் தவறினார்கள். சுயநலமும் பதவி ஆசையுமே அதற்குக் காரணமாகும். தமிழர்களது ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திராது. குறைந்தபட்சம் அது தள்ளிப் போடப்பட்டிருக்கும். சூழ்ச்சியும் தந்திரமும் வாய்ந்த சிங்களத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் அமைச்சர் பதவி, பட்டம், வாக்குறுதி போன்றவற்றை வழங்கித் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றினார்கள். இது பற்றி பின்னர் எழுதுவேன்.

தலைக்கு ஒரு வாக்கு என்றால் (Universal Suffrage) அரசியல் அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களவர் கைக்குப் போய்ச் சேரும் என்பதை இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கிய பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் சிங்கள இனத் தலைவர்களின் உட்கிடக்கையை அறிந்து கொண்டு தமிழர்களுக்கு நேரவிருந்த கேடுகளையிட்டு எச்சரிக்கை செய்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் இனவாதிகள், பிற்போக்குவாதிகள் என பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்களால் அர்ச்சிக்கப்பட்டார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், மொழிகள், மதங்கள் இருக்கும் நாட்டில் எல்லோர்க்கும் வாக்குரிமை என்பது பெரும்பான்மை இனத்தின் அடக்குமுறைக்கு (Tyranny of the majority) வழிவகுக்கும் என்ற உண்மையைத் தமிழர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர்தான் பட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

பொன். இராமநாதன் 1879 இல் தனது 28 ஆவது அகவையில் சட்டவாக்க சபையில் அவரது மாமனார்; சேர். முத்துக்குமாரசுவாமியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தெரிவோடு அவரது அரசியல் வாழ்க்கை தொடங்குகின்றது. இந்தப் பதவியில் 1892 வரை நீடித்தார். 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகித்தார்.

பொன். இராமநாதன் பொன்னம்பலம் முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 1815 ஆம் ஆண்டு சித்திரைமாதம் 16 ஆம் நாள் பிறந்தார். இவர் தமது இளமைக் கல்வியைச் கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியைச் சென்னை இராணிக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து 1874 ஆண்டு சட்டத்தரணியானார். அதன் பின்னர் பத்து ஆண்டு காலம் சட்ட அறிக்கைகளின் ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 தொடக்கம் 1908 வரை சட்ட நாயகமாகவும் (Solicitor General) தற்காலிக சட்டமா அதிபராகவும் கடமையாற்றினார். 1989 இல் பிரித்தானிய அரசு அவருக்கு சேர் (Knight) பட்டத்தைப் பெற்றார். 1903 ஆம் ஆண்டு இராணி வழக்கறிஞர் (Queen's Counsel) பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தப்பட்டார். இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கையர் இவர் ஆவார்.

பொன்.இராமநாதன் முதலியார் இ. நன்னித்தம்பி அவர்களின் மகள் செல்லாச்சியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 ஆண்களும் 3 பெண்களும் பிறந்தார்கள். அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின்னர் 1906 ஆம் ஆண்டு ஆர்.எல். ஹரிசன் என்ற அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார். இந்து சமயத்துக்கு மாறிய ஹரிசன் தனது பெயரை லீலாவதி என மாற்றிக்கொண்டார். இராமநாதன் 1930 இல் மறைந்த பின்னரும் லீலாவதி நீண்டகாலம் இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார். இவர்களுக்குப் பிறந்த ஒரே பெண் சிவகாமசுந்தரி தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பையா நடேசபிள்ளையை மணந்து கொண்டார்.

பொன். இராமநாதன் இளமைக் காலத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களது தொடர்பாலும் ஆறுமுக நாவலர் அவர்களது நட்பினாலும் சைவத் தமிழ்ப் பணிகளில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பெண்களின் கல்வி வளர்ச்சியானது தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கு அடிப்படையாய் அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு 1913 இல் யாழ்ப்பாணம் மருதனா மடத்தில் பெருந்தோகையான பொருட் செலவில் இராமநாதன் மகளிர் கல்லூரியை கட்டி முடித்தார். 1921 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியை நிறுவினார். தமிழர்களது வரலாற்றில் இரண்டு கல்லூரிகளை நிறுவிய ஒரே தமிழ் அரசியல்வாதி என்ற பெருமை இவருக்கு உண்டு.

பெரும் சட்ட வல்லுனராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய இவர் சமயம், தத்துவம், யோகநெறி என்பவற்றிலும் புலமை பெற்றிருந்தார். (வளரும்)

- நக்கீரன்

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (3)
தன்மானத்தமிழனும் தன்னுணர்வில்லாத்தமிழனும்.
3 வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2009 05:43
தயா
தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தும் புரியாதவர்கள் என்றால் கேவலம் சிங்களவன் வந்து குடியானவனாக தன்னினத்தை வளர்ப்பதே தமிழனை எதிர்த்துஅல்ல தமிழனுக்கு பயந்துதான் எதிர்கிறான். தமிழன் தன்னைஉணர்ந்து எதிர்கும்போதெல்லாம் தன்னினமே தமிழனுக்கு முதல்எதிரி தமிழன் எதிரிக்கு துணைபோகாத வரை சிங்களவனால் தன்னிச்சையாக வெல்ல முடியாது. இதை உணரவேண்டியவர்கள் யார்? தன்னித்தை அடிமையாக்க துட்டுக்கு துண்டில் போடதுண்டாதவரைதான் தன்மானத்தமிழன்.
தங்கள் பிள்ளைகளைக்கூட வென்றெடுக்கத் தமிழர் தலைமைகளால் முடியவில்லை
2 ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009 16:20
ரமோனா
நக்கீரன் அவர்களே,
வழமையைபோலவே வரலாறுகள் தொடர்கின்றன. நான் நினைக்கின்றேன் இந்த இரண்டு பெரிய தமிழ்ப் பெருந்தகைகளின் வரலாறுகள் தான் எமது வரலாறுகளாக இந்த இரு நூற்றாண்டுகளிலும் அதிகப்படபேசப்பட்டு வந்திருக்கிறது.இவர்கள் ஆற்றிய பணிகளைசொல்ல விளைகிற நீங்கள் இவர்கள் ஆற்றக்கூடியதாக இருந்து தவறவிட்ட பலவற்றைச் சொல்ல முயற்சிக்கவில்லை. சிங்கள மனிதர்கள் இவர்களோடு சுமூக உறவோடிருந்து, இங்கிலாந்திலிருந்து மீண்டுவருகிற வேளையில் தாங்களே மாடுகளாக இழுத்த வலுத்த வரலாறுகள் இவர்கள் பின்ணனியில் உண்டு.அந்தக்காலத்தில் இவர்கள் தங்களுக்கு சொத்துச் சேர்ப்பதிலும், தங்கள் பெயரில் கோவில் கட்டுவதிலும் கிராமம்கிராமமாக தங்கள் பெயரில் நிலம் வேண்டுவதிலும் செலவழித்திருந்தார்கள். இன்றைக்கும் கடல் கடந்த தேசங்களிலும் உள்நாட்டிலும் இத் தேசபிதாக்களின் சொத்துக்கள் அளவிட முடியாதாயிருப்பதை நீங்கள் அறியாதவரல்ல. நீங்கள் வரலாற்றைப்ப் புரட்டுபவராக இருந்தால் அதில்வரும் ஒவ்வொரு பக்கத்திலும் தமிழரை ஏமாற்றி தாங்கள் பிழைத்துக்கொண்ட எம்மவரின் துரோகத்தனங்களையே அதிகம் பதிய வேண்டியதாயிருக்கும்.
இதற்குப்பிறகு தொடரப்போகிற டொனமோர்,சோல்பரி அரசியல் பகிர்வுகளிலோ அல்லது தன் வயிற்றிற்காக இனத்திற்கே குழிதோண்ட முனைந்த பொன்னம்பலம், தொண்டமான் வரலாறுகளோ கூட எம்முடைய வரலாறுகளில்லை. தந்தை செல்வா அவர்கள் தமிழர்களுக்கான தியாக சிந்தையுள்ள தக்க தலைவர் தான். ஆனால் அவரின் தனயனின் கூட்டுச் சதியால் தான் இந்திய மேலாதிக்கம் இன்று ஈழ மனிதரைக் கொன்று முடித்திருக்கிறது.
ஆக தங்கள் பிள்ளைகளைக்கூட வென்றெடுக்கத் தமிழர் தலைமைகளால் முடியவில்லை என்பது சோகமான உண்மை.நன்றி தொடரும் உங்களின் ஆய்வு பன்முகப்படுத்தப்படட்டும்.
ரமோனா
புலத்தின் கடமை
1 ஞாயிற்றுக்கிழமை, 08 நவம்பர் 2009 00:26
மாதவன்
காலம் தவறி அழுகிறோம். நாளை நடப்பதை யாரறிவார்?
இராட்சத ஆட்சியொன்றில் காலடியில் கிடக்கிறோம்.
எட்டப்பன் குட்டிக்காய் தன் தொட்டிலை விற்கிறான்.
துணுக்காய் முழங்காவிலில் குடியேற்ற 20 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் தயார் நிலையில்-
புலத்தில் குளிர் தெரியாதவர்கள் குளிர்காயப் புறப்பட்டிருக்கிறார்கள்..
மண்ணுக்காக நின்றவர்கள்-மரித்தவர்கள்-உழைத்தவர்களை மட்டும் நினைந்து செயலாற்றி
நாடுகடந்த தமிழரசையாவது சமைப்போம்.. எல்லோருமாக..-மாதவன்

வாசகர் கருத்துக்கள், category: "இலங்கை வரலாறு"

sarvachitthan@gmail.com ஆட்புல சார்புத்துவம் என்ற கோட்பாடு தமிழர்களை தேசிய சிறுபான்மை ஆக்கியது
தன்மானத்தமிழனும் தன்னுணர்வில்லாத்தமிழனும். இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்
புலத்தின் கடமை இரண்டு துருவங்களான தமிழ் சிங்கள சமூகங்கள்
தமிழன் நீதிச் சாதி சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்
தமிழ் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்
freedom சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்
இன்றைய தேவை. சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம்
மிகச்சிறந்த கட்டுரை சிங்களத் தலைவர்களும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துவமும்

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி